Friday, August 5, 2022

பெண் உடல் என்பது வெறும் உடல் அல்ல! பெண் உடல் என்பது வெறும் உடல் அல்ல! ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க கருத்தியல்களின் உருவகம்!

மது போதையில் மூதாட்டியிடம் முத்தம் கேட்டு இளைஞர் தாக்கினார்!
63 வயது முதியவர் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இன்னொரு பக்கம் மாணவிக்கு ஆசிரியர்(கள்) பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி (கள்) தற்கொலை!
வல்லுறவுக்கு எதிராக புகார் கொடுத்து தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி பெயிலில் வெளியே வந்து பழி வாங்க அதே பெண்ணை கூட்டுப் பாலியல் வன்முறை செய்தார்!

என்று தினம் தினம் பாலியல் குற்றங்கள் பற்றிய செய்தி வந்து கொண்டிருக்கிறது. சிறுமிகள், பெண்களுக்கு எதிராக கொடூரமான கொலைகள், தற்கொலைகள், துன்புறுத்தல்கள் இல்லாத நாளே இல்லை. ஆனால் அரசுகள் என்ன செய்கின்றன?

குற்றவாளி”, “கைது”, “தண்டனை” என்பதோ தம் கடமைகளை முடித்துக்கொள்கின்றன? பாதி குற்றங்களில் அது கூட நடப்பதில்லை, மீதி குற்றங்கள் வெளிவருவதே இல்லை!

பெண்கள் பற்றி எப்படிப்பட்ட கருத்துடையவர்கள் policy makers ஆக இருக்கிறார்கள்? அவர்களே பிற்போக்குவாதிகளாக இருக்கையில், சராசரி ஆண்களின் சிந்தனை எப்படி இருக்க்கும்?


பெண் குழந்தைகளும், பெண்களும் இப்படி தினம் தினம் துன்புறத்தலுக்கு உள்ளாவதும் மடிவதும் சமூகத்தின் தலையாய பிரச்சினை இல்லையா? ஆனால் சமூகம் எந்த மாதிரியான விசயங்களுக்கு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது?

ராமர் கோவில் கட்டப்படுமா இல்லையா? மாட்டுக்கறியை தடை செய், ஜெய் ஸ்ரீராம் சொல்லு, துப்பட்டா போடுங்க தோழி, டைட்ஸ் போடாதீங்க தோழி, பெண்களை அடக்கி வை, மூடி வை (எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன), அந்த கோவில்ல இருக்குறது எந்த சாமி சிலை இதெல்லாம் தான் இங்கு பிரச்சினை! ஆனா எந்த சாமியும் தன்னையும், தம் புள்ளையையும் காப்பாத்த வரலன்னு எந்த அப்பன் ஆத்தாளும் யோசிக்குறதில்ல!

எத்தனை முறை இதைக் குறித்து பேசினாலும், எழுதினாலும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தில் சமூகத்தின் அடித்தளம் பற்றிய புரிதல் இருப்பதில்லை! அடித்தளத்தை மாற்றுவதற்கான வேலைக்கு பதில் சட்டத்தை கடுமையாக்கச் சொல்லி கூப்பாடு போடுவதும், குற்றவாளியை கைது செய்தோம், என்கௌண்டர் செய்தோம் என மார் தட்டிக் கொள்வதும், தூக்கில் போடு .. தூக்கில் போடு என்கிற கொலை வெறியும் தான் மேலோங்கி இருக்கிறது!

மீண்டும் சொல்கிறேன்!

அரசுகளும், பெண்கள் நல வாரியமும் சிறுமிகள், பெண்கள் பாதுகாப்போடு ஆண்களின் மனநலன் பேணுவதை முதன்மைப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண் பற்றிய சமூக கருத்தியலை மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்.

உடலின்ப தேவைகள் மீது அவசியமற்ற கட்டுப்பாடுகளை சமூகம் கை விட வேண்டும்.
காமத்தை கொச்சைப்படுத்தும் போக்கு நீங்கி மரியாதைக்குரிய வகையில் பரஸ்பர ஒப்புதலோடு பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வதற்கான கல்வியை கொடுக்க வேண்டும்.

உரிய வயதில் திருமணம் செய்துகொள்ள முடியாத வகையில் நிலவும் கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும். தம்பதிகளுக்கும் கூட பாலியல் கல்வி தேவைப்படுகிறது.

கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, வாழ்க்கைத்தரம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் மனிதர்களுக்கு மேம்பட்ட வாழ்வை உறுதி செய்திட வேண்டும்

For hell's sake take the issue of Sexual Poverty, Sexual Repression, ignorance, dangerous influence of porn videos and the social stigma around sex & women, a serious issue!

பாலியல் குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகளின் மனநிலை ஆய்வு செய்யப்பட வேண்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபட எது அவர்களுக்கு தைரியத்தை வழங்குகிறது என்பதை ஆய்வு செய்யாமல் எப்படி அதை களைவது?

Work towards proper research and sensitizing the society around gender and sex. பெண்ணை, பெண்மையை போற்றுவதை விடுத்து ஆணாதிக்கம் குறித்த அறிவூட்டி அதை ஒழிப்பதற்கான வேலையில் ஈடுபட வேண்டும்.

How the hell is any govt going to protect women and ensure safe life for children and women?

As a woman, as a mother this fear - the fear of sexual abuse, sexual exploitation, some beast waiting there wanting to tear my flesh - is haunting me every day, every minute.

Do the law makers understand the trauma that we - the women go through every minute? - the male gaze, the judgements about our dress, character, our life style, the patriarchal conditioning and the abuses, harassment we go through when we refuse to abide by that. Are they even aware of the position and the plight of women in family and the society!

As long as women are treated as Second Sex, how is just Law enough to annihilate Sexual Violence?

Do the law makers have a radical understanding about the gender bias, the patriarchal system and the materialistic reasons behind the plight of women? No! None of the STATE leaders, nor the STATE machinery have any idea about why there are "bad" men and how to make them good and how to ensure there shall be no "bad" Men! They have no idea how to #STOPSEXUALVIOLENCE , they have no idea about how to change the patrirachal-fedual society! They have no idea how to establish gender equality! Bcos they themselves believe in "feminity", "womanhood", "motherhood" and all craps that subjugates women in the name of "penmai" or biological difference!

ஆண்மை, பெண்மையை ஒழிக்க வேண்டும் என்பதன் பொருள் கூட தெரியாத policy makers தான் நம்மிடையே உண்டு!

இங்க ரெண்டு வகையான கொள்கையாளர்கள் தான் அரசு இயந்திரத்தில் உள்ளனர் - இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை என்று நேரடியாக சொல்பவர். பெண்களை, பெண்மையை போற்றுவோம், பெண் இல்லையேல் மண் இல்லை என்று புகழ்ந்து கொண்டு பெண் என்னும் இலக்கணம் மீறாமல், யார் மனதையும் “புன்படுத்தாமல்” செயல்பட சொல்பவர்கள்!

ஆணாதிக்கம் பற்றிய கூருணர்வற்ற சமூகமும், அரசும் ஒரு பக்கம் என்றால்.. மாணவிகளின் துன்பகரமான மமரணத்தைக் கூட கொச்சைப்படுத்தி பினத்தின் மீது பிழைப்பு நடத்தும் ஊடகங்கள், பேச்சாளர்கள்! எல்லாரையும் வசை பாடிட்டு இருந்தா போதும் இவர்கள் எல்லாம் சமூகத்தின் "கருத்து சொல்லிகள்", people of change!

இதுதான் இங்கு நிலவும் அறிவுச் சூழல், பண்பாட்டுச் சூழல், அரசியல் சூழல். இவர்களின் கூருணர்வற்ற அரசியல் பிழைப்பிற்கு தினம் தினம் பலி ஆவது நாங்களும், எங்கள் சகோதரிகளும், பிள்ளைகளும் தான்..

பெண்களை வாழ வைக்க வக்கற்ற சமூகம் மத நூல்களில் எழுதி வைத்தன – பெண்ணாக பிறப்பது பாவம் என்று! எல்லா பழியையும் பிறப்பின் மேல் போட்டுவிட்டால் அடக்கி வைத்தல் எளிதல்லவா? ஆனால் எழுதப்பட்ட தீர்ப்புகளை திருத்தி எழுதத்தான் தலைமைகள் இல்லை!

பிறக்கும் போதே யாரும் கெட்டவரக்ளாக பிறப்பதில்லை! ஒரு ஆண் (மனிதர்கள் அனைவரும்) ஏன் கொடூர மனம் படைத்தவனாகின்றான் என்னும் சமூகக் காரணியை ஆய்வு செய்யாமல் அதை மாற்றுவதற்கான வேலையில் ஈடுபடாமல் “நல்ல ஆண்களை’ உருவாக்க இயலாது!

A human life born on this earth is made a Man, Woman & an Economic Slave and not a Human Being! But all that matters to the Ruling Class is its Power & Profit!

யாரும் மாற வேண்டாம்... அவரவர் பிழைப்புவாதம் தொடரட்டும்!

இதோ இந்த பதிவின் கீழே வரப் போகும் கமெண்டுகள் உணர்த்தும் நீங்க செய்யவேண்டியது என்ன என்பதை!

ஆணாதிக்கத்தை ஒழிக்க கையாலாகாத அரசுகள் ஆளும் ஒரு நாட்டில் எல்லா நேரமும் பயத்துடனே வாழும் பெண்ணாகிய நான் எனது உடலை கை விடும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

- #கொற்றவை, 8.6.2022No comments:

Post a Comment