
அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் – ஒரு சோசலிசப் பெண்ணிலையாளரின் கடிதம், வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை, விடியல் பதிப்பகம். (1999)
அன்னெத் தெவ்ரு எனும் கற்பனைக் கதாபாத்திரம், 1851இல் மார்க்ஸிற்க்கு எழுதும் கடிதமாக வரைந்திருக்கிறார் ஷீலா ரௌபாத்தம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைப் பட்டியல் பின் வருமாறு:
”ஆகாயத்தில் கோட்டை கட்டுவது, உங்களுக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும். எனவே, எங்களது செயல்பாடுகளின் அடிப்படைகள், நாங்கள் உருவாக்கியுள்ள கோரிக்கைகளின் பட்டியலை இங்கு தந்து என் கடிதத்தை முடித்துக்கொள்கிறேன்.
- பெண்களுக்கு சரிசமமான குடிமை உரிமைகள், அரசியல் உரிமைகள்.
- தொழிலாளர் குழுக்களில் பெண்களுக்குச் சம பங்கேற்பு.
- பெண்களுக்குச் சம ஊதியம்; பெண்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படும் பழக்கத்தை நிறுத்துதல்; நீண்ட வேலை நேரத்தைக் குறைத்தல்; சில தொழில்களைச் செய்வதிலிருந்து பெண்களை விலக்கி வைத்தலை நிறுத்துதல்.
- வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்குத் தொழிற்கூடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தரப்படும் அதே விகிதத்தில் ஊதியம் வழங்குதல்.
- வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள காலங்களில் வேலையைப் பகிர்ந்து கொள்ளுதல்.
- விலைமாதருக்கு மாற்று வேலை வாய்ப்பு.
- வேலை செய்யும் இடங்கள் எல்லாவற்றிலும் உணவு விடுதிகள், குழந்தைக் காப்பகங்கள்.
- மருத்துவச்சிகள் உட்பட அணைத்துப் பெண்களுக்கும் பயிற்சி மையங்கள்.
- வீட்டு வேலை செய்யும் பணியாட்கள் சந்திக்கவும் ஒழுங்கமைத்துக் கொள்ளவும் மையங்கள் ஏற்படுத்துதல்.
- பெண் தொழிலாளர்கள், ஆண் தொழிலாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து (தொழில் தொடங்க) மூலதனம் பெறுவதற்காகச் சங்கங்களை உருவாக்குதல்.
- நல்ல வேலை நிலைமைகள்.
- கடினமான காலங்களில் உழைப்பைக் கொடுத்து, அதற்குப் பதிலாக உணவையும் பாதுகாப்பையும் பெறுவதற்கான வழிமுறைகள்; இலக்கியம், கலை ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டும், கலைகளில் ஈடுபாட்டை வளர்க்கவும் இலக்கிய, கலைச் சங்கத்தை உருவாக்குதல்; வேலையில்லாப் பெண்களுக்கு ம் கூட ஒரு சங்கத்தை உருவாக்குதல்.
- குழந்தைகள் உள்ள குடும்பங்கள், குழந்தைகளோடு தனியாக வாழும் தாய்மார்கள் அல்லது தந்தைமார்கள் வாழ்வதற்கேற்ற தோட்டமுள்ள, பெரிய, காற்றோட்டமான, பொது சமையல் அறைகள் உள்ள வீடுகள்.
- பொது உணவு விடுதிகள், குளியல் அறைகள், கூட்டம் கூடுவதற்கான பொது அறைகள், பொது நூலகங்கள், பொது குழந்தைக் காப்பகங்கள், பொழுதுபோக்குக்கான பொது இடங்கள்.
- பெண் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமான பொதுக் கல்வியும் பயிற்சியும்.
- ஏழைக் கர்பிணிப் பெண்களை மரியாதையுடன் நடத்தும் ஒரு சமூக நலத்திட்டம்.
- இலவசமான மருத்துவச் சேவை. மருத்துவச்சிகளுக்கு அரசு ஊதியம் வழங்குதல்.
- ஆண்களைச் சார்ந்துதான் பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலைமையைப் போக்கும் வகையில் பெண்களுக்கு நிதியுதவி செய்கிற ஒரு சமூக நிதியம்.
- விருப்பப்படால் மட்டுமே பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல்.
’விடுதலைக்கான போராட்டத்தில்
உங்களுடன் உண்மையாக நிற்கும்
அன்னெத் தெவ்ரு
No comments:
Post a Comment